நட்சத்திர பிறந்த நாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் !

3 December 2019, 11:01 am
Quick Share

என்னடா இது நம்ம சூப்பர் ஸ்டார் பிறந்தநாள்தான் டிசம்பர் 12ஆம் தேதி ஆச்சே இன்னிக்கு என்ன ? என்று கேட்போருக்கு , இன்று நடிகர் ரஜினியின் நட்சத்திர பிறந்தநாள் அவரது வீட்டில் கொண்டாப்பட்டது.

தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகையும் திரும்பி பார்க்கவைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ABC என எல்லா சென்டர்களையும் அடித்து நொறுக்கி விட்டார். இவர் 44 வருடங்களாக தமிழ் சினிமாவில் தான் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் என்றும், பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் ரஜினி நிரூபித்துகொண்டே இருக்கிறார், இனிமேலும் அந்த நிலைமை மாறப்போவதில்லை. ரசிகர்களை தன்னுடைய ஸ்டைலாலும், நடிப்பாலும் இன்று கட்டிவைத்துள்ளார். அப்பேற்பட்ட ரசிகர்கள் ரஜினிகாந்தின் பிறந்தநாளை திருவிழா போல் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். ஆதரவு அற்றோருக்கு அன்னதானம், ரத்த தானம் ஏழைகளுக்கு உதவிகள் என்று ரஜினி பிறந்தநாள் தினத்தன்று ஆண்டுதோறும் செய்து வருவார்கள். டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் 69ஆவது பிறந்தநாள் தினத்தன்றும் இதுபோன்றவைகளை செய்ய ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று தனது வீட்டில் நட்சத்திர பிறந்தநாளை கொண்டாடினார். அய்யர்கள் மந்திரங்கள் முழங்க ரஜினியின் நட்சத்திரத்தின் பெயரில் பூஜைகள் செய்தனர். இதையடுத்து, ரஜினி மற்றும் அவரது மனைவி லதாவிடம் குடும்ப உறுப்பினர்கள் ஆசிர்வாதம் பெற்றனர். எல்லோருக்கும் ஏக சந்தோஷம் !

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நட்சத்திர பிறந்த நாள் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நட்சத்திர பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா !

1 thought on “நட்சத்திர பிறந்த நாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் !

Comments are closed.