ரேகா- சனம் ஷெட்டி அதிரடி மோதல் ! மல்காக்க படுத்துகொண்டு வேடிக்கை பார்த்த சுரேஷ் சக்கரவர்த்தி !

Author: Poorni
9 October 2020, 12:13 pm
Quick Share

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், தினந்தோறும் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியின் யாராவது ரெண்டு பேருக்கு சண்டை வந்து விடுகிறது. இதற்கு முன், அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் வந்த மனசதாபமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது வெளியான புரோமோவை பார்த்தால், மேலும் ஒரு சண்டை புதிதாக தோன்றியுள்ளது. நேற்று சமையல் செய்யும்போது ரேகா மற்றும் சனம்ஷெட்டி மோதல் வெடித்துள்ளது.

இந்த நிலையில் ரேகா மற்றும் சனம்ஷெட்டி ஒருத்தருக்கு ஒருத்தர் மோதிக் கொள்கிறார்கள். அப்போது, “நான் குளித்துவிட்டு வருவதற்கு முன் நான் செய்ய வேண்டிய சமையலை ரேகா செய்துவிட்டதாக சனம்ஷெட்டி குற்றச்சாட்ட, நான் உனக்கு ஹெல்ப் தான் பண்ணினேன்” என்று ரேகா கூறுகிறார்.

இவர்கள் இருவருக்குள் குறுக்கிட்ட கேப்டன் ரம்யா, “நீங்கள் யாருக்கும் ஹெல்ப் பண்ண வேண்டாம்,உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்” என்று சொல்ல, கேப்டன் ரம்யா மீது ரேகா பாய, குபீர் சிரிப்பு. இதையெல்லாம் கண்டும் காணாமல் மல்லாக்கப் படுத்துக் கொண்டு வேடிக்கை பார்த்தார் நம்ம சுரேஷ் சக்கரவர்த்தி.

Views: - 71

0

0