“என்னை வெச்சுதான் நீ பப்ளிசிட்டி தேடுற – நீயும் அந்தமாதிரி ஆள் தானே..!” வனிதாவை திட்டிய மீராமிதுன்..!

26 August 2020, 9:50 pm
Quick Share

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது.

அதிலும் பிக் பாஸ் விஷயங்கள் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்தார்.

இது மட்டுமல்லாது எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும், கவர்ச்சியான வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வரும் மீரா, பட வாய்ப்புகளை பெற்ற தீர வேண்டும் என சூர்யா விஜய்யை திட்டி பல வேலைகளை பார்த்து வருகிறார். மேலும் Nepotism தமிழ் சினிமாவில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து வனிதா விஜயகுமார் அவர்கள் ஒரு பேட்டியில், “தமிழ் சினிமாவில் Nepotism என்பது சுத்தமாக கிடையாது”என்று கூறியுள்ளார். இதை பார்த்த மீராமிதுன் அவருக்கு பதில் அளிக்கும் வகையில், “நீ கூட ஒரு Nepotism ப்ராடக்ட் தான் என்று வனிதாவை கூறியுள்ளார் அதுமட்டுமல்லாமல் நான் ஒரு Celebrity என்பதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்.

நீங்கள் பேட்டி கொடுப்பது கூட என்னை வைத்து உங்களை பிரபலமாக்கி கொள்ள தான் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் எனக்கு எந்த அந்தஸ்தை கொடுக்கவில்லை அது என் புகழுக்கு மேலும் ஒரு Feather கொடுத்தது அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.

Views: - 43

0

0