முதல்வன் படத்தின் கதை கேட்காமலே Reject செய்த பிரபல நடிகர் – இப்போ உச் கொட்டி என்ன பிரயோஜனம்?

Author: Rajesh
7 February 2024, 9:08 pm
mudhalvan
Quick Share

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அவரது இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்களே வித்யாசத்திற்கு குறைவில்லாமல், மிகவும் பிரம்மாண்ட படைப்பாக இருக்கும். அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த முதல்வன் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்து ஒட்டுமொத்த திரையிலகத்தையே ஷங்கர் மீதான பார்வையை திசை திருப்பியது.

இத்திரைப்படத்தில் அர்ஜூன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், வடிவேல் மற்றும் பலரும் நடித்திருந்தார்கள். இந்நிலையில் இப்படத்தில் ஹீரோவாக அர்ஜுனை கமிட் செய்வதற்கு முன்னர் ஷங்கர் நடிகர் சரத்குமாரை சந்தித்து கதை கூறினாராம்.

sarathkumar

அப்போது சினிமா மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்த சரத்குமார் ஷங்கரின் உருவத்தையும், தோற்றத்தையும் பார்த்து தவறாக எடைப்போடு கதை கூட கேட்காமல் டீ சாப்பிடப்போறேன். அப்பறோம் வரேன் என கூறிவிட்டு சென்றவர் தானாம் அதன் பின்னர் திரும்பிவரவே இல்லையாம். ஆனால், படம் வெளியாகி வேற லெவல் ஹிட் ஆனதும் சரத்குமார் இந்த படம் தனக்கு மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும் என நினைத்து வருந்தினாராம்.

Views: - 292

0

0