இந்தியன் 2-வில் இருந்து விலகும் ஷங்கர்? கோலிவுட்டில் பரபரப்பு !

23 October 2020, 12:15 pm
Quick Share

ஏகப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு பிறகு, கடந்த வருடம் கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஆரம்பத்தில் இருந்து தடை மேல் தடை, சில மாதங்களுக்கு முன்பு கூட, படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா வைரஸ் லாக்டவுன் வந்துவிட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நின்றுபோனது.

எல்லாம் கடந்து போக, படப்பிடிப்புக்கு தயாராகி வந்த நேரத்தில், சரியாக மத்திய மாநில அரசுகள் படப்பிடிப்பு தொடங்க அனுமதி அளித்தும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்குவதற்கான வேலைகள் ஆரம்பித்ததாக தெரியவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் பிக்பாஸ் முடிந்ததும் கமல் அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் இந்த படத்திற்கான போட்டோஷூட் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில், இந்தியன் 2 பட இயக்குனர் ஷங்கர் தற்போது லைக்கா நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதி உள்ளதாகவும் அதில் இந்தியன் 2 படத்தில் இருந்து விலகும் எண்ணத்தின் இருப்பதாக கூறியுள்ளார்.

Views: - 21

0

0