“நீ வந்து செஞ்சியா?” ரசிகரை திட்டிய ஷிவானி நாராயணன் !
30 September 2020, 11:00 amசின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் நேற்று Live வந்த அவர், ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து இருக்கிறார். அதில் ஒருவர் உங்களுக்கு 21 வயதுதான் ஆகிறது அதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று கேட்டபோது அவர், “ஜீரணிக்க முடியவில்லை என்றால் Gelucil குடியுங்கள், எனக்கு 19 வயது மட்டுமே ஆகிறது” என்று கூறி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் பிளாஸ்டிக் சர்ஜரி மூஞ்சி என்று திட்டிய ரசிகருக்கு, “நீ வந்து செஞ்சுவிட்டியா” என பதிலுக்கு திட்டியுள்ளார்.