சிம்பு ரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ! மாநாடு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் !

21 November 2020, 8:00 pm
Manaadu - Updatenews360
Quick Share

சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை பிரச்சனை பண்ணாமல் முடித்துவிட்டு, வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தில் டைமுக்கு ஷூட்டிங் வருகிறார் சிம்பு. தற்போது பாண்டிச்சேரியில் அந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. December மாதம் முழுவதும் ஷூட்டிங் நடைபெறவுள்ளதாக தகவல் வந்திருக்கிறது.

இன்று காலை மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணைய தளமே அதிர்ந்தது. மேலும் சிம்பு ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக இன்ப அதிர்ச்சியாக வந்து இறங்கியிருக்கிறது மாநாடு படத்தின் செகண்ட் லுக். இந்த செகண்ட் லுக் போஸ்டரை பார்த்த சிம்பு ரசிகர்கள் “அட நம்ம சிம்பு தானா இவர்? பக்கா இஸ்லாமிய ஆளு மாதிரியே இருக்காரு” என்று எல்லா சிம்பு ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க அரசியல் களமாக இருக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் நடிக்கிறார்கள்.

வழக்கம் போல், இசையமைப்பாளராக யுவன் இசையமைக்கிறார். கிட்டத்தட்ட 60 கோடி பொருட் செலவில் இந்த படம் உருவாக இருக்கிறது.

Views: - 14

0

0