ரிலீஸ் சிக்கலில் சிம்புவின் மாநாடு!

Author: Udhayakumar Raman
23 March 2021, 2:42 pm
Quick Share

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்போது முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. எப்போதும் ரசிகர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொள்பவர். அண்மையில், இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும், கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார்.

மாநாடு படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை வி ஹவுஸ் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். மாநாடு படத்தில் சிம்புவுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா, அரவிந்த் ஆகாஷ், டேனியல் அன்னே போப், ரவிகாந்த் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அண்மையில், மாநாடு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.

தமிழ் மொழியில் உருவாகி வரும் மாநாடு படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. மார்ச் மாத த்தில் படப்பிடிப்பு முற்றிலும் முடிக்கப்பட்டு ஒரு மாதம் முழுவதும் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற இருக்கிறது. இதையடுத்து வரும் மே 13 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாநாடு திரைக்கு வரும் என்று கூறப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லீம் இளைஞராக நடித்து வருவது தான் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தடைபடுகிறது. அதிகளவில் மக்கள் கூடும் இடத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்தப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அதிக கவனத்துடன் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக வரும் ஜூன் மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

Views: - 65

3

0