“நூறு தல இராவணன்” சுல்தான் படத்தின் பிரமாண்டமான டிரெய்லர் வெளியீடு !

24 March 2021, 5:40 pm
Quick Share

பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் கார்த்தி தொடர்ந்து நல்ல கதை உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பல குடும்ப கதைகளில் நடித்து படங்களில் நடித்து தமிழ் மக்களின் மனதில் தனி இடம் பிடித்தார். மணிரத்னத்தின் உதவி இயக்குனராக வாழம்கையை ஆரம்பித்த இவர், இன்று அவர் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் கார்த்தி தற்போது சுல்தான் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் முதல் முறையாக ராஷ்மிகா மந்தனா தமிழில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. ட்ரெய்லர் வெளியான சில நொடிகளிலேயே பல லட்சங்களைத் தாண்டி உள்ளது.

பிரம்மாண்டமாக இருக்கும் இந்த ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் மூக்கின் மீது விரல் வைக்கின்றனர். ஆக்ஷன் திரைப் படமான இந்த படத்தில் கார்த்திக் லால், நெப்போலியன் யோகிபாபு, KGF பட வில்லன் ஆகியோர் நடிக்கின்றனர்.

Views: - 41

27

0