நீட் தேர்வை ஒழிக்க குரல் கொடுத்த சூர்யா !

13 September 2020, 9:27 pm
Quick Share

சூர்யா குடும்பத்திற்கு தற்போது போதாத காலம் போலிருக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக சூரரைப் போற்று படம் தியேட்டரில் வெளியாகாமல் இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் தகராறு, மீரா மிதுன் சூர்யாவை திட்டி பேசிய வீடியோ என பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார் சூர்யா.

இந்தநிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் தொடர்ந்து மூன்று மாண, மாணவிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நீட்‌ தேர்வு’ பயத்‌தில்‌ ஒரே நாளில்‌ மூன்று மாணவர்கள்‌ தற்கொலை செய்து கொண்டது மனசாட்‌சியை உலுக்குகிறது. தேர்வெழுதப்‌ போகும்‌ மாணவர்களுக்கு ‘வாழ்த்து’ சொல்வதற்குப் பதிலாக ‘ஆறுதல்‌’ சொல்வதைப் போல அவலம்‌ எதுவுமில்லை” என்று உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Views: - 0

0

0