புது கெட் அப்பில் விஜய் – “தளபதி – 66” படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது..!

Author: Rajesh
6 April 2022, 11:43 am
Quick Share

இளைய தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிக்கவுள்ள திரைப்படம் தான் தளபதி 66. இந்த திரைப்படத்தினை வம்சி இயக்கவுள்ள இப்படத்தை தில் ராஜு தாயாருக்கிறார்.

இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது. ஆனால் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் கதாநாயகி யார் என்பது குறித்து தொடர்ந்து இழுபறி நீடித்த நிலையில் கடைசியாக, நடிகை ரஷ்மிகா ஒப்பந்தமாகியுள்ளார் இதுதொடர்பான அறிவிப்பும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது விஜயின் தளபதி-66 திரைபடத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி கோகுலம் ஸ்டூடியோவில் பூஜையுடன் தொடங்கியது. இந்த விழாவின் போது நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் வம்சி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர் . அப்போது விஜய் நார்மலாக வந்திருந்தார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Views: - 460

1

0