லீக் ஆன மாஸ்டர் படத்தின் முழு கதை – தளபதி ரசிகர்கள் அதிருப்தி !

12 September 2020, 9:00 am
Quick Share

கடந்த வருடம் விருது விழா ஒன்றில் கைதி படத்திற்காக விருது வாங்க சென்ற லோகேஷ் கனகராஜ் அங்கு ஒரு விஷயத்தை கொளுத்தி போட்டு உள்ளார்,” இந்த படத்துல விஜய்ண்ணாவும், சேது அண்ணாவும் வர சீன் எல்லாம் Fire ஆ இருக்கும்” என்று ஒன்றை கொளுத்தி போட்டு போய்ட்டார். அன்று முதல் இன்று வரை படம் எப்போ வரும் என்று விஜய் ரசிகர்களும், பொது மக்களும் ஆவலாக உள்ளார்கள்.

இந்தநிலையில், மாஸ்டர் படத்தின் கதை இதுதான், என ஒரு கதை வைரலாக பரவி வருகிறது. அதாவது,

தளபதி விஜய் ஒரு கல்லூரி பேராசிரியராக இந்த படத்தில் வருகிறார் என்று எல்லோருக்கும் தெரியும். அப்போது எல்லா நேரங்களிலும் அதாவது வகுப்பு நேரங்கள் முதற்கொண்டு குடி கூத்து என அடாவடி பண்ணி கொண்டிருக்கிறார்.

அந்த கல்லூரியில் நடக்கும் மாணவர்களுக்கான இடையே நடக்கும் பிரச்சனையால் விஜய்யின் தலை மேல் விழ சூடு பிடிக்கிறது கதை.

இவரின் குடிப்பழக்கத்தால் தான் இந்த பிரச்சனைகளுக்கு காரணம் என கல்லூரி நிர்வாகம் இவரை நீக்கி விடுகின்றனர். அதன் பிறகுதான் அனாதை குழந்தைகளுக்கு பாதுகாப்பு தரும் ஹாஸ்டலில் பணிபுரிந்து வருகிறார்.

அங்கதான் இருக்கு படத்தின் சூட்சமம், அங்க போய் பார்த்தா பல சின்ன பசங்க போதைக்கு அடிமையானதையும், போதைப்பொருள்கள் விற்பதையும் கண்ட விஜய், அதை செய்வது யாரென்று புலனாய்வு செய்கிறார்.

அவர்களுக்கு போதை பொருட்களை விற்கும், இருப்பவர் நம்ம கைதி அர்ஜுன் தாஸை முதலில் பிடித்து, அதன் மூலம் அவரின் அண்ணனான விஜய் சேதுபதி தான் மூலகாரணம் என்பதையும் விஜய் கண்டுபிடிக்கிறார்.

அதன் பிறகு அதிரடியாக சண்டைக்காட்சிகள், Chasing-Uனு படம் முழுக்க பரபரப்பாக இருக்கும் வகையில் படம் தூள் கிளப்புமாம்.

இந்த கதை இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த கதைதான் மாஸ்டர் படத்தின் கதை எனத் தெரியவில்லை என்றாலும் இப்படி ஒரு கதை கசிந்துள்ளதை விஜய் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 4

0

0