கூடுதலா 10% ஷேர் வேணும்: தியேட்டர் ஓனர்ஸ் கோரிக்கை!

28 January 2021, 7:25 pm
Quick Share


மாஸ்டர் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் கூடுதலாக 10% ஷேர் கேட்டு தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் பலரது நடிப்பில் உருவான மாஸ்டர் படம் கடந்த 13 ஆம் தேதி திரைக்கு வந்தது. கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பிறகு திரைக்கு வந்த மாஸ்டர் படத்திற்கு ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதோடு, மாஸ்டர் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பு பெற்றுள்ளார். உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் ரூ.225 கோடி வரையிலும்,

தமிழகத்தில் ரூ.115 கோடிக்கும் அதிகமாகவும், சென்னையில் ரூ.10 கோடி வரையிலும் வசூல் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. என்னதான் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளுக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்த போதிலும் மாஸ்டர் படம் இப்படியொரு வசூல் சாதனை படைத்துள்ளது. இது இந்திய சினிமாவுக்கே கிடைத்த பெருமை என்று சினிமா விமர்சகர்கள் பலரும் கூறி வருகின்றனர். மாஸ்டர் படம் திரையில் வெளியானதைத் தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் மாஸ்டர் படம் 29 ஆம் தேதி அதாவது நாளை வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பல பிரச்சனைகள், போராட்டங்களைக் கடந்து வந்த மாஸ்டர் படத்தை திரையில் வெளியிட்டதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் தயாரிப்பாளருக்கு முதலில் நன்றி தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போது மாஸ்டர் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டால், திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும். இதனால், திரையரங்கு உரிமையாளர்களுக்கு கூடுதலாக 10% ஷேர் வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏற்கனவே பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், திரையரங்குகள் 50 சதவீதத்திற்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Views: - 0

0

0