உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்க்க போகும் ‘துணிவு’ : படக்குழுவின் பிரமாண்ட ஏற்பாடுகள்.. இது வெறும் ஆரம்பம் தான்..!
Author: Vignesh26 December 2022, 6:30 pm
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் தனது 61வது திரைப்படமான ‘துணிவு’படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பாவனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
இத்திரைப்படம் வரும் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரை அரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன், துணிவு படம் போட்டி போடுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீஃபா கோபுரத்தின் மீதுள்ள திரையில் துணிவு படத்தை விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
#LetsCinema Exclusive: #Thunivu promotions planned at Burj Khalifa and New York, Times Square.
— LetsCinema (@letscinema) December 26, 2022