“அந்த பைக்கை எரித்திடலாம், யூ-ட்யூபை மூடிவிடலாம்..” – TTF வாசன் மீது நீதிபதி காட்டம்..!

Author: Vignesh
5 October 2023, 6:29 pm
ttf vasan- updatenews360
Quick Share

Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து, அதனை வீடியோவாக பதிவிட்டு 2″கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.

manjal veeran ttf -updatenews360

சமூக வலைதளங்களில் பிரபலமான டிடிஎஃப் வாசன் போக்குவரத்து விதிகளை மீறியதால் புகாரியில் சிக்கி பிரபலமானது தான் அதிகம் என்று சொல்லலாம். அந்த வகையில், சமீபத்தில் இயக்குனர் செல்அம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

manjal veeran ttf -updatenews360

அதற்கான போஸ்டரும் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வைரலானது. பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் டாக்டர் கவிதா பிரியதர்ஷினி தயாரிப்பில் உருவாகும் மஞ்சள் வீரன் படத்திற்காக TTF வாசன் சுமார் 1.8 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

manjal veeran ttf -updatenews360

இதனிடையே, படம் ஆரம்பித்து சில நாட்களில் TTF வாசனின் கார் பைக்கில் சென்ற ஒரு நபரின் மீது மோதி சர்ச்சையாகி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

manjal veeran ttf -updatenews360

இந்நிலையில், TTF தன்னுடைய பைக்கில் வேகமாக சென்று வீலிங் அடிக்க முயன்றுள்ளார். அப்போது, நிலைதடுமாறி பயங்கர விபத்தில் சிக்கினார். வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், இருபது லட்ச ரூபாய் பைக்கை ஓட்ட 3 லட்சம் ரூபாய்க்கு பாதுகாப்பு உடை மற்றும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர்த்தப்பினார் டிடிஎஃப் வாசன். ஆபத்தை விளைவிக்கும் வகையில், வண்டி ஓட்டியதாக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுவரை இரண்டு முறை ஜாமீன் கேட்டும் டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

ttf vasan- updatenews360

இந்நிலையில், மூன்றாவது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஜாமீனுக்கு மனு அளித்து இருந்தார். இதன் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், நீதிபதி டிடிஎஃப் வாசன் பற்றி கோபமாக கூறியிருக்கும் கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது. அவரது, யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும், டிடிஎப் வாசனின் பைக்கை எரித்துவிட வேண்டும் என நீதிபதி காட்டமாக கூறியிருந்தார். மேலும், உடல்நிலை சரியில்லை எனச் சொல்லி ஜாமின் கேட்ட வாசனுக்கு சிறையிலே ட்ரீட்மென்ட் அளிக்க நீதிபதி உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 325

0

0