உனக்கு அரசியல் தேவையா?.. விஜய்யை பார்த்து நறுக்குன்னு கேட்டது யார்னு பாருங்க..!

Author: Vignesh
30 March 2024, 3:36 pm

உனக்கு அரசியல் தேவையா?.. விஜய்யை பார்த்து நறுக்குன்னு கேட்டது யார்னு பாருங்க..!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Vijay - Updatenews360

இதனிடையே, சமீபத்தில் தான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர செயலி ஒன்றை அறிமுகம் செய்திருந்தார். அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய் சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் தொடர்ந்து தனது குரலை எழுப்பி வருகிறார்.

Vijay - Updatenews360

இந்த நிலையில், விஜய்யின் GOAT படம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்த பின்னர், தன்னுடைய கடைசி படமான தளபதி 69 இல் நடிக்க உள்ளார். முன்னதாக நடிகர் விஜயின் பல படங்களுக்கு ரிலீஸ் நேரத்தில் பிரச்சினை வந்துள்ளது. அப்படி ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத பிரச்சனைகளில் ஒன்று கத்தி படத்தின் ரிலீஸ் சமயத்தில் நடந்தது தான்.

Vijay - Updatenews360

திரையுலகில் உள்ள பலரும் அந்த சமயத்தில், விஜய்க்கு ஆதரவாக பேசி இருந்தார்கள். அப்போது, இயக்குனர் பாரதிராஜா கத்தி படத்தை ரிலீஸ் செய்ய விஜய்க்கு துணையாக இருந்துள்ளாராம். படம் ரிலீஸ் ஆனதற்கு முன் பாரதிராஜா வீட்டிற்கு சென்று விஜய் நன்றி கூறியுள்ளார். அப்போது, விஜய் உனக்கு அரசியல் தேவையா என கேட்டாராம் பாரதிராஜா இந்த தகவலை இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 237

    0

    0