குஷ்பு வீட்டில் விருந்து சாப்பிட்ட விஜய் சேதுபதி!

17 January 2021, 5:39 pm
Vijay Sethupathi - Updatenews360
Quick Share


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிகை குஷ்பு வீட்டிற்கு சென்று மதிய உணவு சாப்பிட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ரசிகர்களை பக்கத்தில் நெருங்க விடாத சில நடிகர்களுக்கு மத்தியில், தன் ரசிகனை பக்கத்தில் அழைத்து அவனுக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய் சேதுபதிதான்.

மிகவும், எளிமையான தோற்றம், நேர்மையான குணம், ரசிகர்களை மதிக்கும் மனம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதனை மறுக்காமல் ஏற்று நடிப்பவர். உதாரணத்திற்கு, திருநங்கையாக நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தைச் சொல்லலாம்.


நானும் ரௌடி தான், சூப்பர் டீலக்ஸ், 96, சீதக்காதி, சைரா நரசிம்ஹா ரெட்டி, சங்கத்தமிழன், பேட்ட என்று மாஸ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளார். மாஸ் ஹீரோ என்ற கெத்து, தெனாவட்டு இல்லாமல், சிறப்புத் தோற்றத்திலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வெளியிடுவார். இவ்வளவு ஏன், ரஜினிகாந்திற்கு வில்லனாகவும் நடித்துள்ளார்.

தற்போது விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மாஸ்டர் படத்தில் பவானி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய்யை விட விஜய் சேதுபதிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மாஸ்டர் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், விஜய் சேதுபதி நேற்று தனது 43 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.


விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்து பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, படத்திற்கு காந்தி டாக்ஸ் (Gandhi Talks) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், விஜய் சேதுபதி இன்று நடிகை குஷ்புவின் வீட்டிற்கு மதிய உணவிற்கு சென்றுள்ளார். அப்போது குஷ்பு மற்றும் விஜய் சேதுபதி இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தார். வீட்டு சாப்பாட்டுடன் நிறைய விஷயங்கள் பேசிக் கொண்டோம். ஒரு சாதாரண நாளை சிறப்பான நாளாக மாற்றியதற்கு நன்றி விஜய். நிறைய அன்பு, குட் லக் என்று வாழ்த்தியுள்ளார்.


தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, உப்பென்னா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், காத்துவாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார், மும்பைகார், இடம் பொருள் ஏவல், தீபக் சுந்தர்ராஜனின் இன்னும் டைட்டில் வைக்கப்படாத படம், 19 (1) (a) என்று ஏராளமான படங்கள் உருவாகி வருகிறது.

Views: - 0

0

0