புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு லட்சம் நிதியுதவி

17 November 2020, 8:17 pm
Quick Share

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் நடிகர் தவசிக்கு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிதியுதவி வழங்கி உள்ளார்.

நடிகர் தவசி, நான் கடவுள், ஜில்லா, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர், 2013-ம் ஆண்டு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் “கருப்பன் குசும்புக்காரன்” என்ற வசனத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

உணவுக் குழல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசி, மெலிந்த தோற்றத்தில் இருக்கிறார். படங்களில் பெரிய மீசையுடன் தோன்றும் தவசிக்குப் புற்றுநோய் சிகிச்சையால் முடி அனைத்தும் உதிர்ந்து ஆளே மாறிப்போய்விட்டார். சிகிச்சைக்கு போதிய வசதியில்லாததால், அவருக்கு உதவும்படி சமூக வலைத்தளங்களில் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சார்பில் ரூ.25,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தவசி அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயை நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

Views: - 19

0

0