‘வாரிசு’ பொங்கல் ரிலீஸ் இல்லையா..? வெளியாகும் தேதி திடீர் மாற்றம்: இதுதான் காரணமா?

Author: Vignesh
4 October 2022, 10:00 am
varisu updatenews360
Quick Share

விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் வாரிசு படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கும் முனைப்பில் இருக்கின்றார் விஜய்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றார். பிரபல இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை எண்ணுரில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை வெளியான நிலையில், அடுத்ததாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இதனைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகின்றது. மேலும் இப்படத்தில் விஜய்யை சற்று வித்யாசமாக காட்டப்போவதாகவும், வழக்கமான விஜய் படங்களை போல வாரிசு இருக்காது எனவும் தகவல்கள் வருகின்றன.

இதைத்தொடர்ந்து இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி இணையத்தில் கசிந்துள்ளது. அதன் படி இப்படம் ஜனவரி 12 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது.

பொங்கல் பண்டிகைக்கு கிட்டத்தட்ட ஒருவாரம் விடுமுறை என்பதால் ஜனவரி 12 ஆம் தேதியே படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் விஜய்யின் பல படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 273

0

0