விஜய்யை பெல்ட்டால் அடித்த விஜயின் தந்தை SA சந்திரசேகரன் ! பரபரப்பு தகவல் !

10 November 2020, 2:15 pm
Quick Share

தமிழ் திரையுலகில் நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு இருட்டறை என்று எழுச்சிக்கரமான படங்களை இயக்கியவர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். சிறு வயதிலேயே விஜய்க்கு சினிமா மீது ஆர்வம் அதிகம். படிப்பில் கவனம் செலுத்த பிடிக்காமல் சினிமாவில் பெரிய ஹீரோவாக வேண்டும் என்று அடம் பிடித்ததால், கஷ்டப்பட்டு தான் இயக்குனராக சம்பாதித்த ஒட்டு மொத்த பணத்தையும் போட்டு விஜயை ஹீரோவாக வைத்து ஹீரோயின் அம்மாவுக்கு சோப் போடும் காட்சிகளை எடுத்து காட்டி புரட்சி செய்தார் எஸ்.ஏ.சி.

இந்த நிலையில் சில நாட்களாக விஜய் மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் அரசியல் குறித்த செய்திகள் ஊடகங்களில் இடம் பெற்று வருகின்றன. என்ன விஷயம் என்றால் விஜய்யின் அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் என்ற பதவியில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் தான் இதற்கெல்லாம் காரணம் என்றும், விஜய் மக்கள் இயக்கமே புஸ்ஸி ஆனந்த் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர் என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

இது குறித்து பிரபல எழுத்தாளர் கலைமணி அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில், ” SA சந்திரசேகரன் அவர்களுக்கும், விஜய்க்கும் கருத்துவேறுபாடு இன்று நேற்று அல்ல, விஜய்க்கு திருமணம் ஆனதிலிருந்து அவர்களுக்குள் கருத்து வேறுபாடு தான். விஜய் பலரும் காலத்தில் என்னை ஒருமுறை SAC சந்தித்து, நான் விஜய வச்சு இரண்டு படம் எடுத்தேன், 2 வீட்ட வித்துட்டேன்‌. அவன நடிக்காத நடிக்காதனு பெல்ட்டால அடிச்சும் திருந்த மாட்டேங்குறான்‌.
இரண்டு படங்களும் நஷ்டப்பட்டு போச்சு வீட்ட வித்துட்டு நடுத்தெருல நிக்கிறேன்”னு எஸ் ஏ சி என்கிட்ட அழாத குறையா சொன்னார், என்று கலைமணி ஒரு பேட்டியில் கூறியது இன்று பரபரப்பாக பரவி வருகிறது.

Views: - 18

0

0