வடிவேலு பாலாஜியின் சடங்கில் கண்ணீர் விட்ட விஜய் சேதுபதி ! வைரலாகும் வீடியோ !

11 September 2020, 2:30 pm
Quick Share

அது இது எது, கலக்கப்போவது யாரு என்னும் காமெடி ஷோக்களில், வரும் சிறப்பு விருந்தாளிகள் முதல் பார்வையாளர்கள் வரை தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தவர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேலுவை போல தோற்றம் கொண்டு காமெடியில் கலக்கிய இவர், பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

42 வயதான வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவரது மரணம் குடும்பத்தாரையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பலரும் வடிவேல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினார். வடிவேல் பாலாஜியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஜய் சேதுபதி நிதியுதவியும் அளித்தார்.

Views: - 0

0

0