மெகா ஹிட் படத்தை தவறவிட்ட சிம்பு… நடிச்சியிருந்தால் அந்த பிரபல நடிகர் அட்ரஸே இல்லாமல் போயிருப்பார்!

Author: Shree
12 October 2023, 7:59 pm
simbu
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிலம்பரசன். தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை. படத்தின் மூலமாக ஹீரோவாக அதிகமான சிம்பு தொடர்ந்து தம், அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்திருந்தார். குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் லிஸ்டில் இவர் பெயரும் இணைந்து விட்டது. சிம்பு இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர் என பல பரிமாணங்களிலும் தனது வெற்றியை நிலைநாட்டிய ஒருவர் என்று சொல்லலாம்.

thimiru1

இவர் நடிப்பில் கடைசியாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, 40 வயது ஆகியும் நடிகர் சிம்பு திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே உள்ளார். சினிமாவில் நுழைந்து நல்ல நல்ல படங்கள் நடித்துவந்த இவர் இடையில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். இதனால், சரியாக படங்கள் நடிக்காமல் இருந்தார். இப்போது, தான் மீண்டும் உடல் எடையை எல்லாம் குறைத்து அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிம்பு குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. தருண் கோபி இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் திமிரு. விஷால் நடித்திருந்த இப்பட வாய்ப்பு முதலில் சிம்புவிற்கு தான் வந்ததாம். சில காரணத்தால் அவர் நிராகரிக்க பின்னர் விஷால் நடித்து மாபெரும் ஹிட் படமாக்கினார். ஒரு வேலை சிம்பு மட்டும் திமிரு படத்தில் நடித்திருந்தால் அவரது சினிமா கெரியர் இன்னும் உச்சத்திற்கு சென்றிருக்கும். விஷாலும் ஆள் அட்ரஸே இல்லாமல் போயிருப்பார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Views: - 575

2

2