பூஜையுடன் தொடங்கிய விஷ்ணு விஷாலின் இன்று நேற்று நாளை 2 படப்பிடிப்பு!

18 January 2021, 4:30 pm
Quick Share


இன்று நேற்று நாளை 2 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

இந்த படத்திற்கு சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் விருது கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து குள்ளநரி கூட்டம், முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன், ராட்சசன் என்று பல படங்களில் நடித்துள்ளார்.


தற்போது காடன், ஆரண்யா, ஜகஜால கில்லாடி, எஃப்.ஐ.ஆர்., மோகன் தாஸ் என்று பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் இன்று நேற்று நாளை.

டைம் டிராவல் கதையை மையப்படுத்தி வெளியான இந்தப் படத்தை இயக்குநர் ஆர் ரவிக்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், தற்போது இன்று நேற்று நாளை படத்தின் 2 ஆம் பாகமும் உருவாகிறது.


இந்தப் படத்திற்கு இயக்குநர் ஆர் ரவிக்குமார் ஸ்கிரிப்ட் எழுதியுள்ளார். புதுமுக இயக்குநர் கார்த்திக் பொன்ராஜ் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். தயாரிப்பாளார் சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

இன்று நேற்று நாளை 2, திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.


இந்த நிலையில், இன்று நேற்று நாளை 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பட பூஜையில், விஷ்ணு விஷால், கருணாகரன், ஆர் ரவிக்குமார், கார்த்திக் பொன்ராஜ் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 5

0

0