போதைப்பொருள் விவகாரம்..! பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை..!

Author: Sekar
15 October 2020, 5:59 pm
Vivek_Oberoi_UpdateNews360
Quick Share

கன்னட திரையுலக போதைப்பொருள் வழக்கில், மும்பையில் உள்ள விவேக் ஓபராய் வீட்டில் பெங்களூரு போலீசார் இன்று சோதனை நடத்தினர்.

நடிகரின் மைத்துனர் ஆதித்யா அல்வா, கன்னட திரைப்படத் துறையில் பிரபலங்களுக்கு போதைப்பொருள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

முன்னாள் கர்நாடக மந்திரி மறைந்த ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா, போதைப்பொருள் கடத்தல்காரர்கள், போதை பார்ட்டி அமைப்பாளர்கள் மற்றும் கன்னட பிரபலங்களை உள்ளடக்கிய போதைப் பொருள் மோசடியில் ஒரு பகுதியாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதிலிருந்து அவர் தலைமறைவாக உள்ளார்.

பெங்களூரு காவல்துறை இணை ஆணையர் சந்தீப் பாட்டீல், “ஆதித்யா அல்வா தலைமறைவாக உள்ளார். விவேக் ஓபராய் அவரது உறவினர். அல்வா அங்கே இருக்கிறார் என்று எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்தன.

எனவே நாங்கள் சரிபார்க்க விரும்பினோம். இதையடுத்து நீதிமன்ற வாரண்ட் பெறப்பட்டு, குற்றப்பிரிவுக் குழு மும்பையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

கன்னட திரையுலக போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் ஆதித்யாவுக்கு சொந்தமான ஹெபல் ஏரிக்கு அருகிலுள்ள ஒரு பண்ணை இல்லத்தில் நடைபெற்ற போதை பார்ட்டிகளில் கலந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கால்ரானி ஆகியோர் அடங்குவர்.

Views: - 51

0

0