யோகி பாபுவின் மண்டேலா டிரைலர் – செம்ம காமெடி பாஸ் !

Author: Udhayakumar Raman
25 March 2021, 7:13 pm
Quick Share

இவன்லாம் ஒரு ஆளுனு இவன் எல்லாம் நடிக்க வந்துட்டான், என்று யோகி பாபுவை கிண்டல் செய்தவர்களே அதிகம். காலப்போக்கில் அவர்களின் கண் முன்பே வளர்ந்து நிற்கிறார் யோகி பாபு. பேரு, புகழ், காசு , பணம் எல்லாம் சம்பாதிச்சாச்சு, கல்யாணம் ஆகி அப்பாவும் ஆகியாச்சு.

தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மண்டேலா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் யோகிபாபுக்கு ஜோடியாக அழகிய தமிழ் மகள் என்ற சீரியல் மூலம் பிரபலமான ஷீலா ராஜ்குமார் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும், சங்கிலி முருகன், கண்ணன் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த ட்ரெய்லரை பார்க்கையில் ஊருக்குள் நடக்கும் தேர்தல் பற்றிய படமாக தெரிகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் சர்கார் படம் போல், ஒரு Vote -க்கான பஞ்சாயத்து தான் இந்த படத்திலும் இருக்கிறது. மேலும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் , காலை 9:30 மணிக்கு விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

Views: - 62

2

0