உணவு கருகி விட்டால் இனி கவலையே இல்ல… உங்களுக்கான டிப்ஸ் இதோ!!!

Author: Hemalatha Ramkumar
19 October 2022, 6:25 pm
Quick Share

நாம் என்ன தான் உணவு சமைக்கும் போது கவனமாக இருந்தாலும் அவ்வப்போது ஏதாவது சொதப்புவது உண்டு. இது போன்ற சில தவிர்க்க முடியாத ஒரு சில சூழ்நிலைகளில் தான் உணவு கருகி விடும். உணவு கருகி விட்டால் மொத்த உணவுமே வீணாகி விடும். இதனை சரிகட்ட ஏதேனும் வழி உள்ளதா என்பது பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

*பாத்திரத்தின் அடியில் மட்டும் கருக ஆரம்பிக்கும் போது உடனடியாக உணவை வேறு பாத்திரத்திற்கு மாற்றுவது சிறந்தது.

*உணவானது லேசாக கருகி விடும் போது, அமில சுவையில் உள்ள பொருட்கள் எதையாவது சேர்த்து சரிசெய்து விடலாம்.

*நீங்கள் சமைக்கும் உணவை பொருத்து தக்காளி, சிவப்பு ஒயின், வெள்ளை ஒயின், வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

*உணவு கருகி விட்டால் இதனை நன்றாக மாற்ற உருளைக்கிழங்கு ஒரு சிறந்த பொருள். கருகிய உணவில் நறுக்கிய உருளைக்கிழங்குகளை சேர்த்து சிறிது நேரம் கழித்து அதனை தனியாக எடுத்து வைத்து விடலாம்.

*கறி குழம்புகள் கருகி விட்டால் அதனை சரி செய்ய பால், தயிர், கிரீம் அல்லது வெண்ணெய் சேர்க்கலாம்.

*அசைவ உணவுகள் அல்லது இனிப்பு வகைகள் கருகி விட்டால் அரைத்த இலவங்கப்பட்டை சேர்க்கலாம்.

*ஒரு சில நேரங்களில் கருகி உணவின் சுவையை சமநிலைப்படுத்த சாஸ் கூட பயன்படுத்தலாம்.

Views: - 431

0

0