உங்கள் சோர்வை போக்கி உடனடி ஆற்றைலைத் தரும் ஜவ்வரிசி கேசரி!!!

Author: Hemalatha Ramkumar
11 October 2022, 7:32 pm
Quick Share

பழங்காலத்தில் இருந்தே ஜவ்வரிசி என்பது பயன்பாட்டில் இருந்து வருகிறது. விரத நாட்களில் சோர்வை நீக்க ஜவ்வரிசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நாம் ஜவ்வரிசி வைத்து வாயில் எச்சில் ஊற செய்யும் கேசரி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி- 1 கப்
சர்க்கரை- 1 கப்
நெய்- 5 தேக்கரண்டி
ஏலக்காய் தூள்- 1/4 தேக்கரண்டி
குங்கும பூ- ஒரு சிட்டிகை
முந்திரி பருப்பு- 12
உப்பு- ஒரு சிட்டிகை

செய்முறை:
*முதலில் ஜவ்வரிசியை சுத்தம் செய்து விட்டு ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள்.

*ஒரு கப் சர்க்கரையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.

*குங்கும பூவை ஒரு ஸ்பூன் தண்ணீரில் ஊற வைக்கவும்.

*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு, முந்திரி பருப்பை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

*அதே நெய்யில் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து ட்ரை ஆகும் வரை வறுத்து பின்னர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

*ஜவ்வரிசி வெந்ததும் அரைத்து வைத்த சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.

*அவ்வப்போது நெய் சேர்த்து கிளறுங்கள்.

*கடைசியில் குங்கும பூ, ஏலக்காய் தூள் மற்றும் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து கிளறினால் ஜவ்வரிசி கேசரி தயார்.

Views: - 426

0

0