கறிவேப்பிலை வைத்து இத்தனை சுவையான ரெசிபிகளா…???

Author: Hemalatha Ramkumar
4 August 2022, 7:34 pm
Quick Share

கறிவேப்பிலை இல்லாத சமையலறைகளை காண்பது அரிது. அவை உணவுக்கு அற்புதமான நறுமணத்தையும் சுவையையும் தருகின்றன. ஆனால் இந்த இலைகளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது. இதனை அறியாமல் பலர் கறிவேப்பிலையை ஒதுக்கிவிட்டு சாப்பிடுவார்கள். எனவே அனைவருக்கும் இதன் நன்மை கிடைக்கச் செய்ய கறிவேப்பிலை வைத்து சுவையான மூன்று ரெசிபிகள் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பருப்பு தால்ச்சாவில் சேர்க்கவும்:
மிகவும் பிரபலமான வசதியான இந்திய உணவு பருப்பு தால்ச்சா ஆகும். இது சுவையான அதே சமயம் ஒரு சிறந்த சைவ புரத ஆதாரமாகும். பருப்புடன் கறிவேப்பிலையைச் சேர்ப்பது உங்கள் பருப்பின் சுவையை மேம்படுத்துகிறது மற்றும் அதற்கு அதிக ஊட்டச்சத்தை சேர்க்கிறது.

பச்சை ஸ்மூத்தியில் பயன்படுத்தவும்
கீரை அல்லது கோஸ் இலைகள், உறைந்த மாம்பழத் துண்டுகள், வாழைப்பழங்கள், தேங்காய் பால் மற்றும் சிறிது ஆரஞ்சு சாறு ஆகியவற்றால் செய்யப்பட்ட பச்சை ஸ்மூத்தி மிகவும் புத்துணர்ச்சி அளிக்கிறது. அதில் சில கறிவேப்பிலைகளைச் சேர்ப்பது சிறந்த தேர்வாகும். ஏனெனில் இது ஸ்மூத்தியை ஆரோக்கியமாக்குகிறது மற்றும் அதன் சுவையை பாதிக்காது. கறிவேப்பிலையில் உள்ள அனைத்து சத்துக்களையும் ஸ்மூத்தி வடிவில் பெறுவதால் குழந்தைகளுக்கு இது சிறந்தது.

அரைத்து மோரில் சேர்க்கவும்
மோரில் கறிவேப்பிலை சேர்ப்பது அதன் சுவையை அதிகரிக்கும். முதலில் கறிவேப்பிலை, உப்பு, மிளகுத் தூள், பச்சை மிளகாய் சேர்த்து அனைத்தையும் அரைத்து, அதனுடன் மோர் சேர்த்து நன்கு கலக்கவும். உங்கள் கறிவேப்பிலை மோர் தயார்!

கறிவேப்பிலையின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?
* நல்ல ஊட்டச்சத்து மதிப்பு
*எடை குறைக்க உதவுகிறது
*புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது
*சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
*வயிற்று பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது
* தோல் மற்றும் கூந்தலுக்கு நல்லது

மேலும், எதையும் அதிகமாக உட்கொள்வது ஆபத்தானது என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்பதால், கறிவேப்பிலையை அதிகமாக உட்கொள்வதில் கவனமாக இருங்கள். இது வயிற்றில் எரியும் உணர்வு உட்பட செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, அவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.

Views: - 553

0

0