பாலை விட மூன்று மடங்கு கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்!!!

Author: Hemalatha Ramkumar
24 April 2022, 5:02 pm
Quick Share

பால் ஆரோக்கியமான மற்றும் வலுவான எலும்புகளின் ரகசியம் என்று கூறப்படுகிறது. அதனால்தான் நாம் தினமும் பால் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் உங்கள் எலும்புகளுக்கு இது போதுமா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உண்மைமாக சொல்லப் போனால் இதற்கான பதில் இல்லை! மேலும் உங்கள் அன்றாட உணவில் கால்சியத்தை சேர்த்துக் கொள்வதற்கான கூடுதல் வழிகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வலுவான எலும்புகளைப் பெற விரும்பினால், உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய சில கால்சியம் நிறைந்த உணவுகளை இந்த பதிவின் மூலமாக அறியலாம்.

கால்சியம் என்பது நமது உடலில் அதிக அளவில் உள்ள கனிமமாகும். மேலும் நமது எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குகிறது. இதய ஆரோக்கியம் மற்றும் தசை செயல்பாடுகளிலும் இது பங்கு வகிக்கிறது. பால் பெரும்பாலும் கால்சியத்தின் சிறந்த ஆதாரமாகப் போற்றப்பட்டாலும், உங்கள் எலும்புகளை வலிமையாக்க பாலை சார்ந்து இருப்பது நிச்சயமாக போதாது. வலுவான எலும்புகளுக்கு கால்சியம் நிறைந்த மற்ற உணவுப் பொருட்களையும் நீங்கள் உங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

கால்சியம் சத்து நிறைந்த 7 உணவுகள்: கொடுக்கப்பட்டுள்ளன
●விதைகள்
பொதுவாக விதைகள் கால்சியம் நிறைந்தவை மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. கசகசா, எள், செலரி மற்றும் சியா விதைகளில் கால்சியம் நிரம்பியிருப்பதால் அவற்றை உட்கொள்ளலாம். இந்த விதைகளில் புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க சிறந்தவை.

கீரைகள்
நம் அன்றாட உணவில் கீரைகள் சேர்க்க வேண்டியது அவசியம். இவை நம்பமுடியாத அளவிற்கு ஆரோக்கியமானவை. மேலும் கால்சியத்தின் சிறந்த ஆதாரங்கள்.

பாதாம்
பாதாமில் கால்சியம் மட்டுமின்றி, ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஈ போன்றவற்றையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த சிற்றுண்டியாகும். ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை மதியம் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நன்மைகளைப் பார்க்கத் தொடங்குவீர்கள். அவற்றை தனியாக சாப்பிடுங்கள், வேறு சில கொட்டைகள் அல்லது வேறு எந்த உணவுடன் அவற்றை இணைக்க வேண்டாம்.

மத்தி மீன்
நீங்கள் அசைவ உணவு உண்பவராக இருந்தால், மத்தி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அவற்றில் உயர்தர புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களில் நிறைந்துள்ளன. அவை இதயம், மூளை, தோல் மற்றும் எலும்புகளுக்கு சிறந்த தேர்வாக அமைகின்றன. கானாங்கெளுத்தி மற்றும் சால்மன் போன்ற மீன்களிலும் அதிக கால்சியம் உள்ளதால் அவற்றையும் உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

சீஸ்
பெரும்பாலான சீஸ் வகைகள் கால்சியத்தின் சிறந்த ஆதாரங்கள். பாலாடைக்கட்டி உங்கள் கால்சியத்தின் அளவைப் பெற ஒரு சுவையான விருப்பமாக இருக்கலாம். ஆனால் முழு கொழுப்புள்ள பாலாடைக்கட்டியில் கலோரிகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, பாலாடைக்கட்டியை அளவாக உட்கொள்ளுங்கள்.

Views: - 6835

9

0