கள்ளக்காதலுனுடன் உல்லாசம்… இடையூறாக இருந்த 3 வயது மகன் கொலை : கொடூரத் தாய் கைது!!

10 June 2021, 10:35 am
Mother Killed Son- Updatenews360
Quick Share

தெலுங்கானா : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்து 3 வயது மகனை அடித்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜோடிமெட்லா பகுதியை சேர்ந்த உதயா என்ற பெண் கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு மூன்று வயதுடைய மகன் உள்ளான்.

இந்நிலையில் உதயா வேறொரு நபருடன் தொடர்பில் இருந்து வந்தார். தங்களுக்கு இடையேயான கள்ளக்காதலுக்கு மகன் இடையூறாக இருப்பதாக கருதி நேற்று அவனை உதயா கடுமையாக தாக்கினார்.

பின்னர் அவனை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி 3 வயது சிறுவன் பரிதாபமாக மரணமடைந்தான்.
இது பற்றிய தகவல் அறிந்த சிறுவனின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஜோடிமெட்லா போலீசார் உதயாவை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

நாட்டில் கள்ளக்காதல் விவகாரம் அதிகரித்து வரும் நிலையில், இடையூறாக உள்ள குழந்தைகளை கொலை செய்வதும் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 345

0

0