ஹத்ராஸில் மீண்டும் அரங்கேறிய கொடூரம்…மேலும் ஒரு 6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை.!!!

By: Aarthi
6 October 2020, 3:29 pm
crime against woman - updatenews360
Quick Share

லக்னோ: ஹத்ராசில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்த பரபரப்பு அடங்கும் முன்பே 6 வயது சிறுமி வன்கொடுமை செய்து உயிரிழந்த அவலம் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் பரபரப்பு ஓயும் முன்பே அடுத்தடுத்து இளம்பெண்கள், சிறுமிகள் வன்கொடுமையால் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத் தொடர்ந்து மற்றொரு மைனர் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உடல் பாகங்கள் வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் ஹத்ராஸில் 6 வயது சிறுமி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் இறந்ததால் அலிகாரில் தனது உறவினர்களுடன் வசித்து வந்துள்ளார்.

அங்கு சிறுமியை உறவுக்கார சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனால் சுயநினைவை இழந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த அந்த சிறுவனை கைது செய்த அலிகார் போலீஸார் அவரை சிறுவன் சீர்திருத்த இல்லத்தில் அடைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 46

0

0