மத்திய பிரதேசத்தில் விமானப்படையின் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி விபத்து : விமானி படுகாயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2021, 12:27 pm
Aricraft Crash - Updatenews360
Quick Share

மத்திய பிரதேசத்தில் விமானப்படையின் பயிற்சி விமானம் இன்று காலை விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் விமானப்படையின் பயிற்சி விமானம் இன்று காலை விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் விழுந்து நொருங்கியதில் விமானிக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிராஜ் 2000 விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்திய விமானப்படை ட்விட்டரில் இன்று காலை பயிற்சி விமானத்தின் போது இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

Views: - 232

0

0