ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரூ.13.55 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில் பறிமுதல்!!
1 September 2020, 6:22 pmஆந்திரா : கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்கு கடத்திவரப்பட்ட ரூ. 13.55 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவில் மது விலை முன்னர் இருந்ததை விட 200 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆந்திராவுக்கு மது கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
மது கடத்தலை தடுப்பதற்காக மாநில எல்லைகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் ஆந்திரா – கர்நாடகா மாநில எல்லையான பலமனேரில் கங்கவரம் அருகே போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது கர்நாடகாவில் இருந்து நெல்லூருக்கு சென்று கொண்டிருந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் லாரியில் நெல் மூட்டைகள் இருப்பதும் மூட்டைகளுக்குள் மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருபதும் தெரியவந்தது.
மேலும் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களும் இருந்தன. இதையடுத்து லாரியில் இருந்த 3500 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவற்றின் மதிப்பு சுமார் 13 கோடியே 55 லட்சம் இருக்கும்.
ஆந்திராவுக்கு மது கடத்தி வருபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்படும்.இது போன்ற சட்ட விரோத செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என சித்தூர் மாவட்ட கூடுதல் எஸ்.பி. ரிஷாந்த் ரெட்டி தெரிவித்தார் .
0
0