துப்பாக்கியில் தவறுதலாக கைப்பட்டு ஆயுதப்படை காவலர் பலி : பயிற்சியின் போது சோகம்!!

11 September 2020, 2:12 pm
Police Dead - updatenews360
Quick Share

ஆந்திரா : தவறுதலாக கைபட்டு துப்பாக்கி வெடித்ததில் ஆயுதப்படை காவலர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள மாநில ஆயுதப்படை இரண்டாவது பட்டாலியன் முகாமில் ஆயுதப்படை காவலர்கள் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு வரவேற்பு கொடுப்பது பற்றிய பயிற்சியில் துப்பாக்கிகளுடன்
ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆயுதப்படை காவலர் சல்மான் ராஜ் என்பவர் தான் வைத்திருந்த துப்பாக்கி விசையில் அவருடைய கை தவறுதலாக பட்டதால் சீறி பாய்ந்த தோட்டா அவருடைய வயிற்றில் பாய்ந்து மறுபுறம் வழியாக வெளியே வந்துவிட்டது.

உடனடியாக போலீசார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் மரணம் அடைந்து விட்டார். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Views: - 0

0

0