இந்திய விமானங்களுக்கான தடை ஆக., 2 வரை நீட்டிப்பு: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு

Author: Aarthi
27 July 2021, 8:44 am
Quick Share

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கான தடையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு, ஆகஸ்டு 2ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்ததை தொடர்ந்து இந்தியாவில் இருந்து யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வரும் சர்வதேச விமான சேவைகள், ஏப்ரல் 24ம் தேதி முதல் நிறுத்தப்பட்டன.

latest tamil news

இந்நிலையில், இந்திய விமானங்களுக்கான தடையை ஆகஸ்டு 2 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து யு.ஏ.இ., ஏர்லைன்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய விமானங்களின் வருகைக்கு ஆகஸ்டு 2ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

Views: - 185

0

0