பெங்களூரு ஐஐஎஸ்சி வளாகத்தில் ஒரே நாளில் இரு மாணவர்கள் மரணம்..!

4 March 2021, 10:33 am
IISc_Bengaluru_UpdateNews360
Quick Share

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் (ஐ.ஐ.எஸ்.சி) இரண்டு மாணவர்கள் தனித்தனி சம்பவங்களில் இன்று வளாகத்தில் இறந்தனர் என்று கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் சம்பவத்தில், பீகாரைச் சேர்ந்த பிஎச்.டி மாணவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

“தற்கொலைக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்” என்று ஐ.ஐ.எஸ்.சி ஆசிரியர் ஊடகங்களிடம் கூறினார்

மற்றொரு சம்பவத்தில், எம்டெக் மாணவர் கால்பந்து விளையாடும்போது, திடீரென சரிந்து விழுந்துள்ளார்.

“ஐ.ஐ.எஸ்.சி சுகாதார மையத்தில் அவர் முதலுதவி பெற்ற பின்னர், அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.” என்று ஐஐஐசி கல்வி நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் நடந்த இந்த இரு மரணங்களால், ஐஐஎஸ்சி கல்வி நிறுவனம் சோகத்தில் உள்ளது.

Views: - 6

0

0