அடுத்தடுத்த தேர்தல்…வியூகம் வகுக்கும் பாஜக: டெல்லியில் தொடங்கியது தேசிய செயற்குழு கூட்டம்..!!
Author: Aarthi Sivakumar7 November 2021, 1:36 pm
புதுடெல்லி: டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் பிரதமர் மோடி தொடங்கி நடைபெற்று வருகிறது.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப்பை தவிர்த்து பிற மாநிலங்களில் தற்போது பா.ஜனதா ஆட்சியில் உள்ளது.
எனவே அந்த மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கவும், பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்றவும் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து, அந்தந்த மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பாஜக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் 124 செயற்குழு உறுப்பினர்கள் என பலர் நேரில் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில், 5 மாநில சட்டசபை தேர்தலில் கட்சியின் வெற்றிக்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இந்த கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
0
0