ஆளுங்கட்சி பிரமுகரின் காரில் சடலம் : ரூ.20 ஆயிரம் பணத்துக்காக தனது கார் ஓட்டுநரையே அடித்துக் கொன்றதாக உறவினர்கள் புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2022, 2:41 pm
Car Driver Murder 1 - Updatenews360
Quick Share

ஆளும் கட்சி சட்ட மேலவை உறுப்பினர் காரில் முன்னாள் கார் ஓட்டுனர் சடலம் மீட்கப்பட்ட நிலையில் கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடா பகுதியை சேர்ந்தவர் அனந்தபாபு. ஆனந்தபாபு ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் சட்ட மேலவை உறுப்பினர் (MLC) ஆவார்.

அவரிடம் சுப்பிரமணியம் என்பவர் இதற்கு முன்னர் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை சுப்பிரமணியம் வீட்டிற்கு சென்ற எம்.எல்.சி ஆனந்தபாபு சுப்பிரமணியத்தை தன்னுடைய காரில் அழைத்துச் சென்றார்.

நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் சுப்ரமணியம் வீட்டிற்கு வந்த எம்.எல்.சி அனந்தபாபு சாப்பிடுவதற்காக டிபன் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு சுப்பிரமணியம் இறந்துவிட்டார் என்று கூறி தன்னுடைய காரில் இருந்த சுப்பிரமணியம் உடலை அவருடைய குடும்பத்தாருக்கு காண்பித்தார்.

இதனால் சந்தேகமடைந்த சுப்பிரமணியம் உறவினர்கள் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்து தப்பி சென்ற எம்.எல்.சி ஆனந்தபாபு தற்போது தலைமறைவாக இருக்கிறார்.

20 ஆயிரம் ரூபாயை எம்.எல்.சி ஆனந்த்பாபுவிடம் இருந்து சுப்பிரமணியம் கடனாக பெற்றதை அடுத்து கடனை திருப்பி செலுத்த கோரி ஆனந்த் பாபு தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில் காரில் அழைத்துச் சென்று கொலை செய்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று சுப்பிரமணியம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து ஆனந்தபாபுவை தேடி வருகின்றனர்.

Views: - 447

0

0