சிபிஐ வசம் சென்றது ஹத்ராஸ் வழக்கு..! மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..!

Author: Sekar
11 October 2020, 9:16 am
Hathras_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் 19 வயது தலித் இளம் பெண்ணின் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான விசாரணையை மத்திய புலனாய்வுத் துறை நேற்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் இறப்பு தொடர்பான விசாரணையை சிபிஐ கையகப்படுத்த மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சிபிஐயின் சம்பந்தப்பட்ட கிளைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சிபியில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட உடனேயே தடயவியல் நிபுணர்களுடன் விசாரணைக் குழுக்கள் குற்ற சம்பவ இடத்திற்கு அனுப்பப்படும்.

முன்னதாக ஹத்ராஸ் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து, யோகி ஆதித்யநாத் அரசாங்கம், ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு ஒரு கடிதமும் அனுப்பப்பட்டது.

மேலும் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கை அரசியல் மயமாக்குவதை உத்தரபிரதேச முதல்வர் கண்டித்தார். இந்த வழக்கில் சதித்திட்டங்கள் இருக்கலாம் எனக் கூறிய ஆதித்யநாத், 19 வயது பாதிக்கப்பட்டவரின் மரணம் குறித்து அரசியல் செய்கிறவர்களை தண்டிக்க அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் சிபிஐ விசாரணை தொடங்க உள்ளதால், நேர்மையாக விசாரணை நடத்தப்பட்டு விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 35

0

0