ஜம்மு-காஷ்மீரில் 5 அலுவல் மொழிக்கு மத்திய அமைச்சரவை அனுமதி!!
2 September 2020, 6:36 pmடெல்லி : ஜம்மு-காஷ்மீரில் அலுவல் மொழியாக 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி கொடுத்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்திற்க பிறகு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது : உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளை ஜம்மு-காஷ்மீரில் அலுவல் மொழியாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், காஷ்மீர் மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் திட்டமான மிஷன் கர்மயோகி திட்டத்தை செயல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, எனக் கூறினார்.
0
0