அசாம் – மிசோரம் எல்லையில் மத்திய படை பாதுகாப்பு

Author: Udayaraman
28 July 2021, 10:27 pm
Quick Share

டெல்லி :அசாம் – மிசோரம் இடையிலான பிரச்னைக்குரிய எல்லை பகுதியில், மத்திய ஆயுத போலீஸ் படையை நியமிக்க, இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டன.

அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மிசோரத்தில், முதல்வர் ஸோரம் தங்கா தலைமையில், மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடக்கிறது.அசாமின் கச்சார், கரீம்கஞ்ச், ஹய்லாகண்டி ஆகிய மாவட்டங்கள், 164 கி.மீ., துாரத்தை, மிசோரமுடன் பகிர்கின்றன. இங்குள்ள அசாம் நிலப்பரப்பை மிசோரம் அரசு ஆக்கிரமித்ததை அடுத்து, அப்பகுதியில் கலவரம் வெடித்தது .இதில், மிசோரம் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், அசாமை சேர்ந்த ஐந்து போலீசார் உட்பட, ஆறு பேர் பலியாகினர். எஸ்.பி., உட்பட, 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும், எல்லையில் அமைதியை நிலை நாட்டி பிரச்னைக்கு தீர்வு காணவும், இரு மாநில தலைமை செயலர்கள் மற்றும் டி.ஜி.பி.,க்கள் கூட்டத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்தது.மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், ”இரு மாநிலங்களும் தொடர்ந்து பேச்சு நடத்தி, எல்லைப் பிரச்னையில் சுமுக தீர்வு காண வேண்டும்,” என, உள்துறை செயலர் வலியுறுத்தினார்.பிரச்னைக்குரிய எல்லைப் பகுதியில், இரு மாநிலங்களுக்கும் பொதுவான, மத்திய ஆயுத போலீஸ் படையை பாதுகாப்பு பணியில் அமர்த்த, இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டன.

Views: - 147

0

0