“எங்களின் உள்விவகாரங்கள் குறித்து பேசத் தேவையில்லை..! சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த இந்தியா..!

By: Sekar
15 October 2020, 6:36 pm
china_president_xi_jinping_updatenews360
Quick Share

லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக இந்தியா சீனாவை கடுமையாக எச்சரித்துள்ளதுடன், இந்தியாவின் உள் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க சீனாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவை நாட்டின் ஒருங்கிணைந்த பகுதிகளாகவே இருக்கின்றன என்றும் இந்தியா வலியுறுத்தியது.

லடாக் குறித்த சீனாவின் கருத்துக்களுக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, “ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாகவே இருக்கின்றன” என்று கூறினார்.

“அருணாச்சல பிரதேசமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இந்த உண்மை மிக உயர்ந்த மட்டத்தில் உட்பட பல சந்தர்ப்பங்களில் சீனத் தரப்பினருக்கும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேலும், இந்தியாவின் உள் விஷயங்கள் குறித்து கருத்து தெரிவிக்க சீனாவிற்கு எந்த அதிகாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

“பிற நாடுகள் தங்கள் உள்விவகாரங்களில் இந்தியா கருத்து தெரிவிக்கக் கூடாது என எதிர்பார்ப்பதைப் போல், அவைகளும் இந்தியாவின் கருத்து தெரிவிக்காது என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

எல்லையின் இந்தியப் பகுதியில் உள்கட்டமைப்பை அதிகரிப்பது குறித்து சீனாவின் கருத்து குறித்து கருத்துத் தெரிவித்த அவர், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நலனை மேம்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது எனத் தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சிக்கான எல்லைப் பகுதிகளை மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அரசு குறிப்பிட்ட கவனம் செலுத்துகிறது என்று அனுராக் ஸ்ரீவாஸ்தவா மேலும் கூறினார்.

Views: - 45

0

0