நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் தேர்வு இன்று தொடங்கியது – 6 லட்சம் பேர் பங்கேற்பு

Author: Aarthi
4 October 2020, 10:42 am
upsc - updatenews360
Quick Share

நாடு முழுவதும் இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தொடங்கியது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற இந்திய ஆட்சிப்பணிகளுக்கான போட்டித் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

அந்தவகையில், கடந்த மே மாதம் நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு, கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் அக்டோபர் 4ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தேர்வர்களுக்கு கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. தேர்வர்கள் அனைவரும் முககவசம் அணியவேண்டும், தண்ணீர் பாட்டில் மற்றும் சானிடைசர்களை தேர்வர்களே கொண்டு வரவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் தேர்வு 2 கட்டமாக நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு முதல் தாள் தேர்வு தொடங்கியது. பிற்பகல் 2.30 மணிக்கு 2ம் தாள் தேர்வு நடைபெறும்.நாடு முழுவதும் உள்ள 72 நகரங்களில் 2569 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வில் சுமார் 6 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

Views: - 47

0

0