ஜிஎஸ்டி அமல்படுத்தி 4 ஆண்டுகள் நிறைவு….இந்தியாவின் பொருளாதார அமைப்பில் ஒரு மைல்கல்: பிரதமர் மோடி..!!

Author: Aarthi Sivakumar
30 June 2021, 4:44 pm
modi_updatenews360
Quick Share

புதுடெல்லி: ஜிஎஸ்டி அமல்படுத்தி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த ஜிஎஸ்டி சாதாரண மனிதர்களின் வரிச்சுமையை குறைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஜிஎஸ்டி அமல்படுத்தி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது. இது சாதாரண மனிதர்கள் மீதான வரிச்சுமையை குறைத்துள்ளதுடன் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து உள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.

GST_UpdateNews360

பிரதமர் மோடி டிஜிட்டல் இந்தியா திட்டத்தை 2015ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி துவக்கி வைத்தார். இத்திட்டம் துவங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நாளை சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ‘டிஜிட்டல் இந்தியா’ திட்ட பயனாளிகளுடன் உரையாடவுள்ளார்.

Views: - 190

0

0