கேரளாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா: மேலும் 10,691 பேருக்கு கொரோனா

Author: kavin kumar
10 October 2021, 8:21 pm
Quick Share

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் பாதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் மிக அதிகமாகக் காணப்பட்டது. பெரும் பாதிப்புக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல்தான் காரணம் என்று கூறப்பட்டது. இந்தியாவில் பரவிய இந்த வகை வைரஸ் இன்று உலகின் 100-க்கும் அதிகமான நாடுகளில் பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழகம் போன்ற மாநிலங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன.இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது கேரள மாநிலத்தில்தான்.இந்த நிலையில் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 10,691 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,655 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 46,56,866 பேர் குணமடைந்துள்ளனர். 26,258 பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போது 1,11,083 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Views: - 261

0

0