கொரோனாவிடம் இருந்து மெல்ல மெல்ல விலகும் கேரளா :இன்று 7 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா

Author: Udhayakumar Raman
28 October 2021, 7:54 pm
Corona Status - Updatenews360
Quick Share

கேரளாவில் இன்று 7 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிற மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை குறைந்துவந்த நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தது. இந்தியாவில் தினசரி கொரோனா பாசிட்டிவ் பாதிப்பில் 50 சதவிகிதத்துக்கும் மேல் கேரள மாநிலத்தில் பதிவானது. சில சமயத்தில் ஒட்டுமொத்த இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதி கொரோனா பாதிப்பு கேரளத்தில் பதிவானது. கடந்த ஆகஸ்ட் மாதம் தினசரி புதிய கொரோனா பாதிப்பு 20,000க்கும் மேல் சென்றது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு 30,000-தைக் கடந்து அச்சுறுத்தியது. இதனால் கொரோனாவைக் கட்டுப்படுத்த கேரள அரசு பல கட்ட முயற்சிகளை எடுத்தது. அதன் பயனாக கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

அதன்படி கேரளாவில் இன்று 7 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 460 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 48 லட்சத்து 36 ஆயிரத்து 928 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 76 ஆயிரத்து 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 56 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்து சுகாதாரத்துறையின் கணக்கில் சேர்க்கப்படாத 110 உயிரிழப்புகளும் பலி எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 685 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 159

0

0