கூடுதல் கவனம் தேவை மக்களே…இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ICMR வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

Author: Aarthi Sivakumar
28 October 2021, 11:19 am
Corona_India_Updatenews360
Quick Share

புதுடெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இதன்படி நேற்று முன் தினம் 12,428 பேருக்கும், நேற்று 13,451 பேருக்கும் வைரஸ் பாதிப்புகள் பதிவான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,156 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 156 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,42,31,809 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 733 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,56,386 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 17,095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,60,989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 60,44,98,405 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Views: - 228

0

0