கேரளாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!!இன்று 15,058 பேருக்கு தொற்று

By: Udayaraman
13 September 2021, 8:31 pm
TN Corona -Updatenews360
Quick Share

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,058 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கேரளாவில் நேற்று 1,15,575 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 20,240 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் 1,34,861 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 20,487 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 91,885 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் 15,058 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் 2ஆம் தேதிக்குப்பிறகு கடந்த 8ஆம் தேதி மீண்டும் தினசரி தொற்று 30 ஆயிரம் கடந்த நிலையில் கடந்த ஐந்து தினங்களாக தினசரி தொற்று மீண்டும் 30 ஆயிரத்திற்கும் கீழே குறைந்து வருகிறது.

Views: - 117

0

0