“பக்ரீத்தில் ஆடு பலியிடுவதை நிறுத்தினால் இதையும் நிறுத்தலாம்”..! பட்டாசு தடை குறித்து பாஜக எம்பி பொளேர்..!

8 November 2020, 7:52 pm
sakshi_maharaj_unnao_updatenews360
Quick Share

உத்தரபிரதேசத்தில் உன்னாவ் பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜின் கருத்துக்கள் மீண்டும் பரபரப்புக்கு வழிவகுத்துள்ளது. பேஸ்புக் பதிவில், பாஜக எம்.பி.சாக்ஷி மகாராஜ், பக்ரீத்தில் ஆடுகள் பலியிடப்படாமல் இருந்தால், தீபாவளியில் மக்கள் பட்டாசுகளை வெடிக்க மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.

ராஜஸ்தான், டெல்லி, ஒடிஷா, சிக்கிம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கொரோனா மற்றும் சுற்றுச்சூழல் அச்சம் காரணமாக பட்டாசுகளை விற்பதற்கும், வெடிப்பதற்கும் தடை போட்டுள்ளது.

மேலும் அட்டாச்சு வெடிப்பிற்கு நாடு முழுவதும் தடை போடுவது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மத்திய அரசிடம் அறிக்கை கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சர்ச்சையான கருத்துக்களைக் கூறுவதற்கு பெயர்போன பாஜக எம்பி சாக்ஷி மகாராஜ், இது தொடர்பாக ஒரு கருத்துக் கூறி புதிய பரப்பரப்பைக் கிளப்பியுள்ளார்.

“ஆடு பலியிடப்படாமல் பக்ரீட் கொண்டாடப்படும் ஆண்டில் தீபாவளி பட்டாசுகள் இல்லாமல் கொண்டாடப்படும். எனவே யாரும் மாசு குறித்து தங்கள் அறிவை செலுத்தக்கூடாது” என்று சாக்ஷி மகாராஜ்  பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

Views: - 28

0

0

1 thought on ““பக்ரீத்தில் ஆடு பலியிடுவதை நிறுத்தினால் இதையும் நிறுத்தலாம்”..! பட்டாசு தடை குறித்து பாஜக எம்பி பொளேர்..!

Comments are closed.