டென்மார்க் பிரதமர் இந்தியாவுக்கு வருகை: பிரதமர் மோடி வரவேற்பு…காந்தி நினைவிடத்தில் மரியாதை..!!

Author: Aarthi Sivakumar
9 October 2021, 10:51 am
Quick Share

புதுடெல்லி: 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்த டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சனுக்கு பிரதமர் மோடி வரவேற்பு அளித்தார்.

டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. அவர் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரை சந்தித்து இருநாட்டு உறவுகள் பற்றி பேச உள்ளார்.

இந்தியாவும், டென்மார்க்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பசுமை யுக்தி கூட்டுறவை ஏற்படுத்தி கொண்டுள்ளன. அதுபற்றியும், இருநாடுகளுக்கும் இடையே உள்ள பல்வேறு விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் இன்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவரை, பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். டெல்லி ராஷ்டிரபதி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய மெட்டே, எங்களின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியாவை நாங்கள் நினைக்கிறோம். இந்த வருகையை டென்மார்க் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளுக்கான மைல்கல்லாக பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Views: - 341

0

0